மயிலாப்பூர் திருக்கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு... திருப்பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை!!
சென்னை மயிலாப்பூர் சித்திரக்குளம் அருள்மிகு ஆதி கேசவபெருமாள் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
சென்னை மயிலாப்பூர் சித்திரக்குளம் அருள்மிகு ஆதி கேசவபெருமாள் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூர், சித்திரக்குளம் அருள்மிகு ஆதி கேசவபெருமாள் திருக்கோயிலில் உள்ள சன்னதிகள், பசு மடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை மடப்பள்ளி ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
பின்னர் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் இதுக்குறித்து பேசிய அவர், பேயாழ்வார் அவதரித்த திருத்தலமான ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் இறை தரிசனம் முடித்து, சுற்றுபுற சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை, மடப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டோம். 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இத்திருக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. இக்கோயிலின் சித்திரக்குளம், ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதும்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !
இதை இந்து சமய அறநிலையத்துறை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த திருக்கோவிலுடைய திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது, திருக்கோவிலுக்கு வரவேண்டிய வருமானங்கள் தடையின்றி கொண்டு வந்து சேர்ப்பது, ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடங்களை சட்டரீதியாக மீட்கின்ற நடவடிக்கைகளை முழு வேகத்துடன் மேற்கொள்வது, இத்திருக்கோயிலை பொறுத்தளவில் பல்வேறு நிலையில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நீதிமன்றம் காட்டுகின்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.