Asianet News TamilAsianet News Tamil

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா.. விழாவில் பங்கேற்ற முதல்வர், அமைச்சர்கள் அதிர்ச்சி.!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Medical counselling... 4 student corona affect
Author
Chennai, First Published Nov 19, 2020, 10:48 AM IST

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. அரசு கல்லூரிகளில் உள்ள 3032 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில்(பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ். இடங்களும் ஆக மொத்தம் 405 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

Medical counselling... 4 student corona affect

முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்ட தரவரிசையின் படி 262 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Medical counselling... 4 student corona affect

இதனிடையே, மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வழங்கி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios