சென்னை அருகே நாயையை பிடிக்க முயன்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் நாய் குட்டியை காப்பாற்ற நினைத்த வாலிபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபன் (வயது 28). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். தனது இரு மகள்களும் நாய்குட்டி வேண்டும் என்று கேட்டதைத் தொடர்ந்து குட்டி நாய் ஒன்றை எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து நாய்க்குட்டி கீழே விழுந்துள்ளது.
அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் கீழே விழுந்த நாய்க்குட்டியை தீபன் தூக்க முயன்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையின் டிவைடரில் மோதியது, இதில் தீபன் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் நமது கொடி பறக்க வேண்டும்; தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்
அம்பத்தூரில் வசிக்கும் தீபனுக்கு 24 வயதில் பவானி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஒரகடம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற தீபன், அங்கு நாய்க்குட்டி இருப்பதைப் பார்த்து, குழந்தைகளின் விருப்பப்படி நாய்க்குட்டியை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. பிள்ளைகள் விரும்பியபடி நாய்க்குட்டியை அழைத்து வர தந்தை சென்ற உலகம் இதோ வந்தது குழந்தைகளையும் குடும்பத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம்; பெற்றோரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஆசிரியர்