சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று எங்கெல்லாம் மின்தடை ஏற்பட போகிறது தெரியுமா? இதோ முழு விவரம்..!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர்,போரூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில், இன்று சென்னையில் மின்தடை ஏற்படபோகும் முக்கிய இடங்கள் எவைஎவை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மயிலாப்பூர், அம்பத்தூர், போரூர், கீழ்ப்பாக்கம், செம்பியம், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.