சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா: 1158 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பிப்பு

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் 1158 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

Madras Christian College Graduation Day: 1158 Students received degree Certificate vel

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தன்நிதிப்பிரிவின் 23வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக புதிய வளர்ச்சி ங்கியின் (New Development Bank) தலைமை இயக்குநரும், குஜராத் அரசின் மேனாள் தலைமைச் செயலாளருமான டி.ஜே.பாண்டியன் IAS கலந்து கொண்டார். இவ்விழாவில் 15 துறைகளைச் சேர்ந்த 1,158 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவர்களில் 80 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர்.

பட்டமளிப்பு விழா பிற்பகல் 2.30 மணிக்கு இறைவேண்டல் பாடலுடன் தொடங்கியது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வரும், செயலாளருமான முனைவர் பால் வில்சன், விழாத் தலைமை உரையாற்றினார். 2022 - 23ம் கல்வியாண்டில் கல்லூரி நிகழ்த்திய சாதனைகளை எடுத்துரைத்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரித் தேசிய, பன்னாட்டு அளவில் பல்வேறு உயர்நிலைகளை அடைந்துள்ளதையும், சிறந்த கல்லூரியாக இந்திய அளவில் ஏழாவது இடத்தையும், சென்னை மண்டல அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளதோடு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேசிய கற்கை நிறுவன தரவரிசை அமைப்பினால் 16வது சிறந்த கல்லூரியாக தெரிவு செய்யப் பெற்றதையும் தம் உரையினூடே எடுத்துரைத்தார்.

Madras Christian College Graduation Day: 1158 Students received degree Certificate vel

மேலும் கல்லூரின் கல்விப் புலத்திற்கு பெருமை சேர்க்குமு் வகையில் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பெற்றுள்ள MCC Innovation Park என்ற ஆராய்ச்சி தொழில்முனைவுப் பூங்காவை 2024ம் ஆண்டு டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசின் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்ததையும், கல்லூரி்ப பேராசிரியர்களின் உலகத்தரத்திலான ஆய்வுகள், வெளியீடுகுள், மாநாட்டுப் பங்களிப்புகள் ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்திரனராகக் கலந்து கொண்ட டாக்டர் பாண்டியன், 187 ஆண்டுகள் மரபுடைய செ்னனை கிறிஸ்தவ கல்லுரியின் சிறப்பினை புகழ்ந்துரைத்தார். ஆட்சித்துறை, நிதி மற்ம் சிவில் சேவைகளில் தனித்துவமான அனுபவம் கொண்ட அவர் உலகளாவிய சவால்களையும், தொழில்நுட்பத்தின் மேம்பாடு தரும் நன்மைகளையும் விளக்கினார். அத சமனயம் மின்னணுவியலின் மாயத்தையும் சரியான தகவல் பரப்பலின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அரசியல் மற்றும் ஆட்சி துறைகளில் ஈடுபடவும், மக்களாட்சியினைக் காக்கவும், அரசமைப்பின் தத்துவங்களை உறுதிப்படுத்தவும் இளைஞர்கள் தங்களுடைய பங்களிப்புகளை வழங்க வேண்டும் எ்னறு அழைப்பு விடுத்தார். அச்சம் இல்லை, அச்சம் இல்லை என்ற ப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கோள்காட்டி, இளைங சமூகத்தினர் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று கூறி தம் உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து கல்லூரி முதல்வர் பால் வில்சன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இறுதியாகப் பட்டமேற்பு உறுதிமொழியும், அதனையடுது்து நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios