சென்னையில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. காதலி பலி.. காதலன் சீரியஸ்..!

சென்னை அடுத்த பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு நேற்று இரவு 8.15 மணியளவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது காதல்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி நிலையில், ரயில் முன்பு பாய்ந்தனர். 

loving couple jumped in front of a train in Chennai..  girlfriend was killed.. boyfriend hospital

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் முன்பு விழுந்து காதல் ஜோடி தற்கொலையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், காதலி உயிரிழந்த நிலையில், காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சென்னை அடுத்த பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு நேற்று இரவு 8.15 மணியளவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது காதல்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி நிலையில், ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் இளம்பெண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையும் படிங்க;- என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா.. உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. இளைஞர் செய்த செயல்

loving couple jumped in front of a train in Chennai..  girlfriend was killed.. boyfriend hospital

காதலன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனையடுத்து,  ரயில் ஓட்டுநர்  மாம்பலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் காதலனை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடுத்த பொண்டாட்டிக்கு ஆசைப்பட்ட வாலிபர்.. தற்போதைய நிலையை பார்த்தீங்களா?

loving couple jumped in front of a train in Chennai..  girlfriend was killed.. boyfriend hospital

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மடிப்பாக்கம் பகுதியை  சேர்ந்த இளங்கோ (20). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம்  ஆண்டு பட்டபடிப்பு படித்து வந்தது தெரியவந்தது. உயிரிழந்த பெண் யார் என்பது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ரயில்கள் அங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios