காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் மூன்று மாதத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய பல்லாவரம் சுபம் நகர் சர்ச்  தெருவை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகன் வெங்கடேஷ்(23) கடை ஊழியர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த போது உடன் படித்து வந்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா(23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது. இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த  3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

 இந்நிலையில், ஸ்டெல்லாவிற்கு அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவம் பார்த்தும் குணமாகததால் கடந்த சில நாட்களாகவே அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ஸ்டெல்லா குளித்துவிட்டு தனது படுக்கை அறையினுள் சென்றவர். பல மணிநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால்  சந்தேகமடைந்த கணவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்டெல்லா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்டெல்லா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.