சென்னையில் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டு காதலிக்கு பரிசாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த குமரேசபாண்டியன். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவுக்கார பெண் ஒருவரை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால், குமரேச பாண்டினுடன் இருந்த நட்பையையும் துண்டித்தார். 

இதனால், வேலைக்கு போகாமல், கடும் மனஉளைச்சலில் குமரேசபாண்டியன் இருந்து வந்துள்ளார். நேற்று மாலை குமரேசபாண்டியன், பொழிச்சலூரில் உள்ள நண்பர் முத்துவை பார்க்க சென்றார். அப்போது அங்குள்ள காலி மைதானத்தில் நண்பவருடன் மது அருந்தினர். அப்போது, திடீரென மதுபாட்டிலை உடைத்து தனது கையை அறுத்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனால், ரத்தம் அதிகளவு வெளியேறிக் கொண்டிருந்தது. 

அப்போது, குமரேசபாண்டியன், தனது கையில் இருந்து வெளியேறிய ரத்தத்தை காலி மதுபாட்டிலில் பிடித்து நிரப்பியுள்ளார். அந்த பாட்டிலை நண்பர் முத்துவிடம் கொடுத்து காதலை ஏற்க மறுத்த தனது காதலிடம் பரிசாக ரத்தத்தை கொடுத்து விடும் படி கேட்டுக் கொண்டார். பின்னர், உடனே குமரேசபாண்டியனை மீட்ட அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதிக ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.