லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கிய சோதனை சென்னை, கோவை, கொல்கத்தா, மும்பை, டெல்லி என நாடு தழுவிய அளவில் இந்த சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

தமிழகத்தில் லாட்டரி தடை விதிக்கப்பட்டதற்கு பிறகு அவர் வட மாநிலங்களில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். கொல்கத்தாவில் அதிக அளவிலான லாட்டரி விற்பனை கிளைகளை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மார்ட்டின் தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி ஆகிய நகரங்களிலும் மார்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ள மார்ட்டின் வரிஏய்ப்பு செய்ததாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மார்ட்டினை வருமானவரித்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து அவரிம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.