சைபர் குற்றங்களை தடுக்க நிறைய கணினி பொறியாளர்கள் தேவை... டிஜிபி சைலேந்திரபாபு கருத்து!!

சைபர் குற்றங்களை தடுக்க நிறைய கணினி பொறியாளர்கள் தேவை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

lot of computer engineers are needed to prevent cyber crimes says dgp sylendra babu

சைபர் குற்றங்களை தடுக்க நிறைய கணினி பொறியாளர்கள் தேவை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இந்த நவீன காலத்தில் சைபர் கிரைம் மற்றும் செக்யூரிட்டி குறித்து எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியமாகும். இளைய தலைமுறை மாணவ-மாணவிகள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் 4 விதமான மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதில் உடல் மொழி முக்கியமானது.

இதையும் படிங்க: நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கவுரி.! யார் இவர்.? எதிர்ப்புக்கு என்ன காரணம்.? சர்ச்சைக்குரிய கருத்து என்ன.?

இணையம் உலகளாவிய புத்தகம் ஆகும். அதில் தேடினால் எல்லாம் கிடைக்கும். முன்பெல்லாம் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து தான் திருடினார்கள். இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகிறார்கள். அப்படியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகிறார்கள். சைபர் செக்யூரிட்டி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அதனை நன்றாக படிக்க வேண்டும். சைபர் குற்றங்களை தடுக்க நிறைய கணினி பொறியாளர்கள் தேவை.

இதையும் படிங்க: விக்டோரியா கவுரி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வைகோ பேட்டி

எனவே கல்லூரி மாணவர்கள் தான் கணினி பொறியாளராக உருவாக வேண்டும். லிங்க் என்றாலே ஆபத்து தான். அது குறித்து விழிப்புணர்வு மிக முக்கியம் தேவை. யாராவது லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம். உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகம் கூகுள்தான். உலகமே டிஜிட்டலாக மாறி வருகிறது. தமிழகத்தில் காவல் உதவி என்ற செயலியை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது. அதில் 66 விதமான வசதிகள் உங்களுக்காக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios