Asianet News TamilAsianet News Tamil

இனி போலீஸ் ஓசி பயணத்துக்கு ஆப்பு? ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து டிஜிபிக்கு பறந்த பரபரப்பு கடிதம்..!

ரயில்களில் வெளியூர் செல்லும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றனர். முதல் மற்றும் 2ம் வகுப்பு பெட்டி இருக்கைகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர். டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது காவலர் என்பதற்கான அடையாள அட்டையை மட்டும் காட்டுவதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்தது.

letter from Railway Administration to DGP Sylendra Babu
Author
Chennai, First Published Feb 25, 2022, 7:49 AM IST

ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது.

ரயில்களில் வெளியூர் செல்லும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றனர். முதல் மற்றும் 2ம் வகுப்பு பெட்டி இருக்கைகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர். டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது காவலர் என்பதற்கான அடையாள அட்டையை மட்டும் காட்டுவதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ரயிலில்  உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

letter from Railway Administration to DGP Sylendra Babu

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்;- தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் சிலர், விரைவு ரயில்கள் உட்பட பல ரயில்களில் செல்லும்போது பயணச்சீட்டு எடுப்பது இல்லை. ஆனாலும், முதலாவது, 2-வது வகுப்புகளின் முன்பதிவு பெட்டிகளில் பிற பயணிகளின் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கின்றனர். பரிசோதகர்கள் அவர்களிடம் பயணச்சீட்டு கேட்கும்போது, சம்பந்தப்பட்ட ஆவணங்களை காண்பிக்காமல் அடையாள அட்டையை காண்பித்து, தொடர்ந்து அதே இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்வதாக ரயில்வே நிர்வாகத்துக்கு அதிக அளவில் புகார்கள் வருகின்றன.

letter from Railway Administration to DGP Sylendra Babu

எனவே, அலுவல் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் காவலர்களுக்கு பயணச்சீட்டு தொடர்பான ஆவணங்களை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் போலீஸார் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் போலீஸார் பயணிக்கக் கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios