சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் இதுவரை கொரோனவால் 1082 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மறுபுறம் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் தகவல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக சென்னையில் கொரோனாவின் தாக்கம்  மிகவும் அதிகமாக இருந்ததால்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் இருந்த கொரோனா சிகிச்சை வார்ட்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக  தகவல் தெரிவிக்கின்றன. 

அனைத்துப் படுக்கைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் நிரப்பப்பட்டுள்ளதால் இரு மருத்துவமனைகளிலும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுதிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு அடுத்துஅங்கு வைத்து சிகிச்சை அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.