சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதையில் இருந்த இளம்பெண்ணை கட்டிலில் தள்ளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அலுவலக வேலையாக கடந்த 22-ம் தேதி சென்னை வந்த இந்துமதி, ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இரவு அறையில் இந்துமதி மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது, ஓட்டல் ரூம் சர்வீஸ் ஊழியரை அழைத்து வேலை வாங்கி உள்ளார். வேலை முடிந்த உடன் ஓட்டல் ஊழியர் அறையில் உள்ள ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு, போதையில் தனியாக இருந்த இந்துமதியை கட்டிலில் தள்ளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் போதையில் இருக்கும் போதே அலறினார். சத்தம் கேட்டு அருகில் உள்ள அறையில் தங்கி இருந்த நபர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் ஓடிவந்து இந்துமதியை ஓட்டல் ஊழியரிடம் இருந்து மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நட்சத்திர ஓட்டலில்  பரபரப்பு ஏற்பட்டது.