சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி! நாளை இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்காக சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaanum Pongal 2025! Traffic change on Kamarajar road in Chennai tomorrow tvk

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும் 

குறிப்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

போக்குவரத்து மாற்றம்

* காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

*  மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து (War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் (Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் (Light House) இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion), பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்) 

*  கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையாக செயல்படும் பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி நோ என்ட்ரி ஆகவும் செயல்படும்.

*  காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் 13.00 மணி முதல் 22.00 மணி வரை அனுமதிக்கப்படாது. வாகன ஒட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios