சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்... இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம். 

சென்னை ஐஐடி நிறுவனம் தற்போது, பொறியியல் துறை சார்ந்த பணிகளுக்கான காலி இடங்கள் குறித்த தகவலை வெளியிட்டு, தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுவதாக அறிவித்துள்ளது. பொதுவாக ஐஐடி போன்ற நிறுவனங்களில், அதிக முன் அனுபவம் இருக்க வேண்டும் என்று சில சமயங்களில் கூறப்படுவது உண்டு, ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு ஒரு வருட முன் அனுபவம் இருந்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி பணிவிவரங்கள் மற்றும் சம்பளம், குறித்த முழு தகவல்களை பார்ப்போம்:

வேலை: (Hardware Engineer) 

காலியாக உள்ள மொத்த இடங்கள்: 6

பணியாளருக்கு மாதம் தோறும் வழங்கப்பட உள்ள சம்பளம்: ரூ.20,000 - 25,000

வேலையில் சேருவதற்கான முக்கிய தகுதிகள்: பொறியியல் துறையில் B.Tech, EEE,ECE,E&I போன்ற பிரிவில் கீழ் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு வருடமாவது, பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டியது முக்கியம்.

விண்ணப்பதாரரை தேர்வு செய்யும் முறை: வேலைக்கு விண்ணப்பிக்கப்படுபவர்கள், தகுதியின் அடிப்படியில் தேர்வு செய்யப்பட்டால், அவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும், பின்னர் அவர்களுக்கான முடிவுகள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ஹார்ட் வேர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக கூட விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இது போன்ற பணிக்கு காத்திருந்தால், உடனே உங்களுடைய விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக கூட இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.