Asianet News TamilAsianet News Tamil

இன்னும் 3 மாதங்களுக்கு மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளி கட்டாயம்.. சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி சரவெடி..!

பொதுமக்கள் விழா காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

It is mandatory to wear the mask for 3 more months...chennai corporation commissioner prakash
Author
Chennai, First Published Oct 28, 2020, 6:09 PM IST

பொதுமக்கள் விழா காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மழைநீர் வடிகால் துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார் ஆகியோர் செயய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கடந்த 2016ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் ரூ.4034 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப்பகுதிகளில் 406 கிமீ தூரத்துக்கு ரூ.1387.27 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக  கோவளம் வடிகால் திட்டம் ரூ.360 கிமீ தூரத்துக்கு ரூ.1243.15 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளது. இதனை 3 கட்டங்களாக செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்ட பணிகள் ரூ.270.83 கோடியில் 52 கிமீ தொலைவுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

It is mandatory to wear the mask for 3 more months...chennai corporation commissioner prakash

கோவளம் வடிகால் திட்டத்தின் மொத்த பரப்பளவு 1138 ஹெக்டர். 980.7 ஹெக்டர் பரப்பளவில் (86.21%) தற்போது வீடுகள் உள்ளன. 149 ஹெக்டர் (13.10%) சாலைகள் உள்ளன. மீதம் உள்ள 7.8% ஹெக்டர் பரப்பளவில் கல்வாய் அமைய உள்ளது. மொத்த பரப்பளவில் ஒரு சதவீதத்தில் மட்டுமே, இந்த கால்வாய் அமைக்க உள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

It is mandatory to wear the mask for 3 more months...chennai corporation commissioner prakash

மேலும், பொதுமக்களிடையே புரிதல் ஏற்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மண்டல அளவில் தலைமை பொறியாளர் தலைமையில்  இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுடன், டெங்கு தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடக்கிறது.  பொதுமக்கள் விழா காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு மாஸ்க் அணிவது மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிப்பது ஆகிய விதிகள் கடுமையாக்கப்படும் என கூறினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios