Asianet News TamilAsianet News Tamil

காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்வது அவசியம்.. இல்லையென்றால் நிலைமை மோசமாகும்..!

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

It is important to have a corona test immediately if you have the flu..Health Secretary Radhakrishnan
Author
Chennai, First Published Sep 11, 2020, 10:04 AM IST

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு மக்கள் வரவேண்டும். தனக்கு இந்த நோய் இருக்காது என நினைத்து பலர் அலட்சியமாக உள்ளனர்.

It is important to have a corona test immediately if you have the flu..Health Secretary Radhakrishnan

நோய் தொற்றால் நுரையீரல் பாதிப்பு அதிகமான பிறகு சிகிச்சைக்கு வரும்போது சிகிச்சை மேற்கொள்ள சவாலாக உள்ளது. எனவே சிறிய அளவிலான காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என்றார். மேலும், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போது கொரோனா தடுப்புக்கான மிக முக்கியமான ஆயுதம் மாஸ்க் மட்டும் தான் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios