Asianet News TamilAsianet News Tamil

கொரோனா காலத்தில் 11,600 சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா! 3,971 சிறை ஊழியர்களும் பங்கேற்றனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் யோகா கற்றுக்கொடுத்தனர்.
 

isha teaches yoga to 11600 prisoners during corona pandemic
Author
Chennai, First Published Oct 29, 2020, 5:15 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் யோகா கற்றுக்கொடுத்தனர்.

இந்த யோகா வகுப்புகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மத்திய சிறைச்சாலைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்டது. இதில் 8,165 ஆண் கைதிகள், 3,453 பெண் கைதிகள், 3,018 ஆண் ஊழியர்கள், 953 பெண் ஊழியர்கள் உட்பட மொத்தம் 15,589 பங்கேற்று பயன்பெற்றனர்.

isha teaches yoga to 11600 prisoners during corona pandemic

அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் திறனை அதிகரிப்பதற்காக ’சிம்ம க்ரியா’ என்ற பயிற்சியும், உடல் மற்றும் மனதளவில் அமைதியாகவும் சமநிலையாகவும் இருப்பதற்காக ‘யோக நமஸ்காரம்’ மற்றும் ‘ஈஷா க்ரியா’ ஆகிய பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன.

அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இவ்வகுப்புகள் தங்களுக்கு பெரிதும் பயன் தரும் வகையில் இருந்ததாக சிறைத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 28 ஆண்டுகளாக இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, நீலகிரி, திருப்பூர், திருவண்ணாமலை  உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் கொரோனா காலத்தில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios