Asianet News TamilAsianet News Tamil

கொளுத்திப் போட்ட அண்ணாமலை.. மாற்றி மாற்றி பேசும் அதிமுக தலைவர்கள்.. ரூட் திமுக பக்கம் போகுதே..

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்தக் கருத்து அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Is Jayalalitha a Hindutva leader? AIADMK leaders caught in controversy. BJP's plan-rag
Author
First Published May 29, 2024, 7:08 PM IST | Last Updated May 29, 2024, 7:08 PM IST

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலாளருமான கேபி முனுசாமி, “ஜெயலலிதாவை இந்துத்வா தலைவர் என அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார். திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை. மக்கள் நலன் சார்ந்த அரசியலை அதிமுக முன்னெடுக்கிறது. இந்துத்துவா கொள்கைக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றவர் ஜெயலலிதா. பாஜகவின் தேவைக்கு அதிமுகவை பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

மக்கள் ஏற்றுக்கொண்டால் தான் தமிழகத்தில் பாஜக வளரும். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் அண்ணாமலை. அவருடன் விவாதிக்க நாங்கள் அரசியல் அனுபவம் அற்றவர்களா?” என்று கூறினார். அதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுபற்றி வெளியிட்டுள்ள பதிவில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். இது தான் அவரது அன்றைய உண்மையான நிலைப்பாடு. அந்த செய்தித்தாளில் வந்தது இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்கு காட்டுகிறது.

Is Jayalalitha a Hindutva leader? AIADMK leaders caught in controversy. BJP's plan-rag

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம். ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக ஒடிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும் மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுக நீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை. தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பி அண்ணாமலை,தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது.

முல்லை பெரியாறு விவகாரம்,மேகேதாட்டு - காவிரி விவகாரம்,பாலாறு விவகாரம் என தமிழகத்தைச் சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணுக்கு பேராபத்து நேர உள்ளது. இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும், தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும்,தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார். மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது” என்று தெரிவித்திருந்தார் ஜெயக்குமார்.

இந்த நிலையில் கே.சி பழனிச்சாமி இதுதொடர்பாக அதிமுக தலைவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், “கே.பி முனுசாமி ஜெயலலிதா பற்றி தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது ஆகும். தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள் பேசுவது பாலுக்கும், பூனைக்கும் காவலனாக இருப்பது போல உள்ளது. எடப்பாடியோ, அதிமுகவோ சித்தாந்த ரீதியில் தெளிவாக இருக்க வேண்டும். போட்டி என்பது அதிமுகவிற்கும், திமுகவுக்கும் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கே.சி பழனிச்சாமி.

நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து விசாரிக்க சிறப்பு குழு: பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios