சென்னை கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

சென்னை நீலாங்கரை கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Indo pacific humpback dolphins spotted near neelankarai

சென்னை நீலாங்கரை கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான TREE அறக்கட்டளை, கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள் தெற்கு - ஈஞ்சம்பாக்கம் நோக்கி நீந்துவதைக் கவனித்துள்ளது. இதுக்குறித்து அந்த அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சுப்ரஜா தாரினி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: மீண்டும் ஊருக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்; பொதுமக்கள் அச்சம்

Indo pacific humpback dolphins spotted near neelankarai

Photos credits: TREE foundation

இதுக்குறித்து அந்த அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சுப்ரஜா தாரினி கூறுகையில், நீலாங்கரை கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் 30-40 டால்பின்கள் காணப்பட்டன. அவை உணவு உட்கொண்டு ஒன்றோடு ஒன்று விளையாடிக்கொண்டிருந்தது. எங்கள் படகு அவற்றை நெருங்கியதும் படகின் இஞ்சினை நிறுத்தி விட்டு அவற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் டால்பின்களை கவனித்தோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட மாநகராட்சி அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்

Indo pacific humpback dolphins spotted near neelankarai

Photos credits: TREE foundation

மேலும் அவை வெவ்வேறு நிறங்களில் இருந்ததையும் காண முடிந்தது. ஒவ்வொரு டால்பினுக்கும் உடலிலும் முதுகுத் துடுப்பிலும் தனித்த நிறங்கள் இருந்தன. இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிற நிழல்கள் ஒவ்வொரு டால்பினுக்கும் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுக்குறித்த புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios