வரி ஏய்ப்பு புகார்.. சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!
சென்னை அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடன்ஸி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடன்ஸி ஹோட்டல் உரிமையாளர் வீடு, அவரது அலுவலங்களிலும் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் காஞ்சிபுரம், மணலி, அண்ணாநகர், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேநேரத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.