தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் அபராதம்.. தொங்கினால் 3 மாதம் சிறை.. ரயில்வே துறை எச்சரிக்கை.!
கடந்த 2021 -22ம் நிதி ஆண்டில் விதிகளை மீறி ரயில் பாதையை கடந்து சென்ற 1,411 பேர், ரயில் படிக்கட்டில் தொங்கியப்படி பயணித்த 767 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து கீழே விழுந்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல் ரயிலின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தண்டவாளங்களில் செல்ஃபி
கடந்த 2021-22ம் நிதி ஆண்டில் விதிகளை மீறி ரயில் பாதையை கடந்து சென்ற 1,411 பேர், ரயில் படிக்கட்டில் தொங்கியப்படி பயணித்த 767 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து கீழே விழுந்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அபராதம்
ரயில்வே விதிகள் 156வது பிரிவின்படி, ரயிலின் மேற்கூரை பகுதியில் ஏறுவது, படிகளில் தொங்கியபடி பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ரயிலின் படியில் தொங்கியப்படி பயணம் செய்தால், மூன்று மாதங்கள் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று, செல்ஃபி எடுத்தால், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.