Asianet News TamilAsianet News Tamil

இருசக்கர வாகனம் வைத்துள்ளவரா உடனே இதை தெரிஞ்சிக்குங்க..!! தெரிஞ்சா காண்டு ஆயிடுவீங்க...!!

அதாவதுபுதிய மோட்டார் வாகன சட்டதிருத்தத்தின் படி லாரி, ட்ராக்டர் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் இலகுரக வணிக வாகன ஓட்டுநர்கள் யாரும் லுங்கி அணிந்து வாகனங்களை ஓட்டக்கூடாது. அவர்கள் பேண்ட், சட்டை மற்றும் ஷு அணிந்துகொண்டுதான் வாகனங்களை இயக்க வேண்டும்

if u have two wheeler fist should know
Author
Chennai, First Published Sep 10, 2019, 1:05 PM IST

திருத்தம் செய்யப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின்படி லுங்கி அணிந்து  வாகனம் ஒட்டுவது அபராதத்திற்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களிடம் 2000 ரூபாய் அபராதம் வசூலிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.if u have two wheeler fist should know

நீண்ட எதிர்ப்புக்கு பின்னர் திருத்தப்பட்ட  மோட்டார் வாகன சட்டம் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் இதுவரை கண்டிராத வகையில் புது புது கட்டுப்பாடுகளை போக்குவரத்து போலீசார் நடைமுறைபடுத்தி அபராதம் வசூலித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கில் வசூலிக்கப்பட்டு வந்த அபாராதத் தொகைகள்  ஆயிரக்கணக்கில் உயர்த்தப்பட்டுள்ளது. இதானால் ஆங்காங்கே அபராதத்தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஒட்டிகள் தங்கள் ஆற்றாமையை வெளிபடுத்தி வருகின்றனர்.if u have two wheeler fist should know

சமீபத்தில் டெல்லியில் வாகன ஒட்டி ஒருவர் அபராதத் தொகை தன்னுடைய வாகனத்தில் மதிப்பைவிட அதிகமாக இருந்ததைக் கண்டு,தன் இரு சக்கர வாகனத்தை போலீசாரின் கண்முன்னாலேயே நடு சாலையில் போட்டு பெட்ரோல் உற்றி தீ வைத்து எரித்து எதிரிப்பை காட்டினார். அந்தளவிற்கு  புது சட்டத்தால் வாகன ஒட்டிகள் கடும் மனஉலைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.  இந்நிலையில் ஒட்டுனர் உரிமம், ஆர்சி புக், இன்சூரன்ஸ் நகல் ,எல்மெட் போன்றவைகள் இல்லை என்றால் பொதுவாக அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கமாக இருந்த நிலையில்.  உத்திர பிரதேச மாநில போலீசார் ஒரு படி மேலே போய். கனரக வாகனம் மற்றும் இலகுரக வாகனம் எதுவாக இருந்தாலும் ஓட்டுனர்கள் லுங்கி அணிந்து ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளது. if u have two wheeler fist should know

அதாவதுபுதிய மோட்டார் வாகன சட்டதிருத்தத்தின் படி லாரி, ட்ராக்டர் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் இலகுரக வணிக வாகன ஓட்டுநர்கள் யாரும் லுங்கி அணிந்து வாகனங்களை ஓட்டக்கூடாது. அவர்கள் பேண்ட், சட்டை மற்றும் ஷு அணிந்துகொண்டுதான் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது,  இந்த விதிமுறை கண்டக்டர்கள் மற்றும் க்ளீனர்களுக்கும் பொறுந்தும் என்று முதற்கட்டமான உத்திரபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டுனர்கள் மற்றும் க்ளீனர்கள் மத்தியில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுனர்கள் மற்றும் க்ளீனர்கள் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருப்பதால் அதற்கு ஏதுவாக லுங்கிகள் அணிந்து ஒட்டிவந்தனர் தற்போது அவைகளுக்கும் முதல்முறையாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios