Asianet News TamilAsianet News Tamil

இட்லி 1 ரூபாய்.. குடிநீர் பாட்டில் ரூ5 .. கிளாம்பாக்கம் மட்டுமல்ல.. தமிழ்நாடு முழுவதும்.! பாஜக கொடுத்த ஐடியா..

முதல்வர் ஸ்டாலின் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து  கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் இட்லி ஒரு ரூபாய், குடிநீர் பாட்டில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Idli should be given for 1 rupee and bottled water for 5 rupees all over Tamil Nadu.Idea given by BJP-rag
Author
First Published Feb 12, 2024, 5:55 PM IST

தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகருக்கு வெளியே கிளாம்பாக்கத்தில், பொங்கல் பண்டிகைக்கு முன்பு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட 'கலைஞர் நூற்றாண்டு புறநகர் பேருந்து நிலையம்',  சென்னை மாநகருக்கு வந்துச் செல்லும்  லட்சக்கணக்கான மக்களுக்கு கொடுந் துயரமாக மாறியிருக்கிறது. சாதாரணமாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வீடு கட்டினாலே, அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்திருக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன்தான் கட்டுவார்கள். ஆனால், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை 25 ஆண்டுகளுக்குள்ளாகவே மாற்றி இருக்கிறார்கள்.  

சென்னை புறநகர் பேருந்து நிலையம் என்பது, சென்னை மாநகர் மற்றும் புறநகர் மக்களுக்கானது மட்டுமல்ல. தமிழகத்தில் வசிக்கும் எட்டு கோடிக்கும் அதிகமான மக்களும் என்றாவது ஒருநாள் கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டிய பேருந்து நிலையம்.
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த சென்னை புறநகர் பேருந்து நிலையம், தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதற்கு மாற்றாக, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய  தேவையே எழவில்லை. ஆனாலும், சென்னை மாநகருக்கு வெளியே கோயம்பேட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கிளாம்பாக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய போதே, அங்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும். 2021 மே மாதம் திமுக  ஆட்சிக்கு வந்த பிறகாவது மெட்ரோ ரயில் நிலையத்திற்கான பணிகளைத் தொடங்கி முடித்திருக்க வேண்டும். ஆனால் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்காமலேயே புதிய பேருந்து நிலையத்தை திமுக அரசு அவசர அவசரமாக திறந்து வைத்துள்ளது. இதுவே பிரச்னைக்கு முக்கிய காரணம். புதிய பேருந்து நிலையத்தையும் மெட்ரோ ரயில் நிலையத்தையும் ஒரே நேரத்தில் திறந்திருந்தால் மக்களுக்கு இவ்வளவு சிரமம் இருந்திருக்காது.

ஆனால், தமிழகத்தை ஆண்ட கட்சியும், இப்போது ஆளும் கட்சியும் மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தங்களின் சுய லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டதால் தான் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளுடன், நள்ளிரவிலும் நடுத்தெருவில்  நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. புறநகர் பேருந்து நிலையம் போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அது குறைந்தது 100 ஆண்டுகளாவது பயன்பாட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..

கோயம்பேடு பேருந்து நிலையத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், மக்களைப் பற்றி சிந்திக்காமல் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் அதில் தங்களுக்கு என்ன லாபம், தங்களை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே யோசித்து திட்டமிடுவதால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் இணைந்து திமுகவை தெருவில் இழுத்து விட்டிருக்கிறார்கள். தினம் தினம் பேருந்து நிலையத்தில் மக்களை அலைகழிக்கிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள்,  திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் தான் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் தமிழக மக்கள் படும் கொடும் துயரம் இப்போதைக்கு தீரப் போவதே இல்லை. ஆனால், போக்குவரத்து துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரும் வீண் வதந்தி பரப்புகிறார்கள், மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கிளாம்பாகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வரும் வரை, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சனை ஓரளவுக்காவது குறையும்.  

தவறான தகவல்களைக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கும் இரு அமைச்சர்களையும் நம்பாமல், முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  நேரில் ஆய்வு செய்து, இந்த விஷயத்தில் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உடனடியாக நல்ல முடிவு எடுக்க வேண்டும்.  இல்லையெனில் அதற்கான விலையை திமுக கொடுக்க வேண்டி இருக்கும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு இட்லி ரூபாய் 25க்கு விற்கப்படுகிறது.  ஒரு இட்லியின் விலையே 25₹ ரூபாய் என்றால், மற்ற பொருட்களின் விலையை பற்றி கேட்க வேண்டியது இல்லை.

அமைச்சர்களுக்கு லஞ்சப் பணத்தை கொடுத்து, கடைகளை எடுத்தவர்கள், சட்டத்திற்கு புறம்பாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அனைத்து பொருட்களையும் மிக அதிக விலைக்கு விற்பதை தமிழக அரசு தடுத்து நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும். மேலும் கிளாம்பாக்கம் மட்டுமல்ல அனைத்து பேருந்து நிலையங்களிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில்  கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தமிழக பாஜக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios