பால்கனி வழியாக துப்பட்டவால் இறங்க முயன்ற IAS பயிற்சி மாணவி.. 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி.!
தனது துப்பட்டா உதவியுடன் மொட்டை மாடி வழியாக கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பட்டா பாரம் தாங்காமல் கிழிந்து அறுந்துள்ளது. இதில், மகிழ்மதி 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அறையில் தூங்கிய ஆண் நண்பரை எழுப்புவதற்காக மாடியில் இருந்து வீட்டின் பால்கனிக்கு துப்பட்டா உதவியுடன் கீழே இறங்கிய போது, எதிர்பாராத விதமாக துப்பட்டா அறுந்து 3வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் மகிழ்மதி(25). இவர் சென்னை ஜாம்பஜார் கண்ணப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்தார். நேற்று இவரது ஆண் நண்பர் ராஜ்குமார் என்பவர் மகிழ்மதி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த மகிழ்மதி கதவை தட்டிய போது கதவு திறக்கப்படாததால் உடனே ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ராஜ்குமார் செல்போனை எடுக்காததால் பதற்றமடைந்த மகிழ்மதி பால்கனி வழியாக பின்பக்க கதவை திறந்து உள்ளே செல்ல திட்டமிட்டு 3-வது மாடியில் இருந்து துப்பட்டா மூலம் பால்கனிக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அதன்படி தனது துப்பட்டா உதவியுடன் மொட்டை மாடி வழியாக கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பட்டா பாரம் தாங்காமல் கிழிந்து அறுந்துள்ளது.
இதில், மகிழ்மதி 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக ஜாம்பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகிழ்மதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த மாணவி மகிழ்மதி அறையில் தங்கியிருந்த நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.