மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவானதையடுத்து மத்திய வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி எதிரொலியால் தமிழகத்தில் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னையில் பரவலாக காலை முதலே பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக தமிழகம், ஆந்திரத, ஓடிசா, தெலுங்கானா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 9 செ.மீ., திருப்புவனத்தில் 7செ.மீ., ராஜபாளையம் 6 செ.மீ., மானாமதுரை, ஆத்தூர் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.