Asianet News TamilAsianet News Tamil

அப்பாடா... தப்பித்தது தமிழகம்... பதற வேண்டாம் மக்களே... இதோ ஒரு நல்ல சேதி..!


ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

heavy rainfall to coastal on april 30 due to fani cyclone chennai meteorological centre
Author
Tamil Nadu, First Published Apr 26, 2019, 4:48 PM IST

ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. heavy rainfall to coastal on april 30 due to fani cyclone chennai meteorological centre

தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி ஃபனி புயல் தாக்க இருப்பதாகவும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.   புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 150 கிமீ இருக்கும் என்று சொல்லப்பட்டதால், மீட்பு பணி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாம்பன், கடலூர் நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.heavy rainfall to coastal on april 30 due to fani cyclone chennai meteorological centre

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ’’சென்னையில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த மண்டலம் நிலை கொண்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக் கூடும். இதனால் அன்றைய தினம் வடதமிழகம் அருகே புயல் வரும், புயலின் நகர்வைப் பொறுத்தே காற்றோ, மழையோ இருக்கும். கடல் சீற்றம் இப்போதைக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.heavy rainfall to coastal on april 30 due to fani cyclone chennai meteorological centre

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏப்ரல் 28,29 ஆகிய தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதேபோல, 30ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ரெட் அலர்ட் என்பது வானிலை ஆய்வு மையத்தால் தரப்படுவதில்லை. கனமழைக்கான வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு பகுதி சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும். அவ்வளவுதான்" எனத் தெரிவித்தார். இதற்கிடையே இந்தப் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios