Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 4 நாட்களுக்கு இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை பகீர் எச்சரிக்கை.!

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

Heavy rain is expected in these 9 districts for 4 days in Tamil Nadu
Author
Tamil Nadu, First Published May 16, 2022, 7:18 AM IST

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக  9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

Heavy rain is expected in these 9 districts for 4 days in Tamil Nadu

மே 16-ம் தேதியான இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி, விருதுநகர், சேலம், ஈரோடு மாவட்டங்களிலும், 17-ம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். வரும் 18-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், வரும் 19-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது, நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

Heavy rain is expected in these 9 districts for 4 days in Tamil Nadu

மே 17-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios