தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் நேரடி தாக்கம் இல்லை என்றாலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் நவம்பர் 30ம் தேதியில் இருந்து இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இதன்காரணமாக தமிழகம் உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் நேரடி தாக்கம் இல்லை என்றாலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகம் முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவில் இருந்து பலத்த மழை பெய்கிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு சென்னை உட்பட பெரும்பாலான நகரங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Last Updated 30, Nov 2019, 10:17 AM IST