வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் லேசான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமும் தமிழகத்தில்  அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அனல் காற்று வீசுவதால், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினத்திற்கு முன், மழை பெய்து பூமியை குளிர் வித்தாலும், மழை பெய்வதால், கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்கிற பயமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: இந்நிலை மாறும்... தொழிலாளர்களை வாழ்த்தி கமல் போட்ட மே தின ட்விட்!

இந்நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது...  ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

 மேலும் செய்திகள்: அஜித்தை கட்டிப்பிடித்திருக்கும் விஜய்..! சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தல - தளபதி போஸ்டர்ஸ்!
 

அதே போல் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.