Asianet News TamilAsianet News Tamil

21-ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும்..!! ஆறுதல் செய்தியை வெளியிட்ட வானிலை மையம்..!

தமிழகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதியுடன் கத்தரி வெயில் முடிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினம் தோறும் பகல் நேரத்திலேயே சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்றால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 21-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

heavy rain alert
Author
Tamil Nadu, First Published Jun 19, 2019, 12:19 PM IST

தமிழகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதியுடன் கத்தரி வெயில் முடிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினம் தோறும் பகல் நேரத்திலேயே சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்றால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 21-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. heavy rain alert 

கடந்த சில நாட்களாவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் கூறியிருந்தது. இதனால், இயல்பை விட வெப்பம் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படும் என்பதால் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது.

 heavy rain alert

இந்நிலையில், வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 3-4 நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் வெயிலின் தாக்கம் குறையும். குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறைய]ம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 21-ம் தேதிக்கு மேல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி பொதுமக்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios