அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய பெருங்கடல் – வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சில தினங்களுக்கு முன்னா் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும். இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது. ஃபனி புயல் ஏப்ரல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது கடல் காற்று மணிக்கு 90 முதல் 100 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 27 மற்றும் 28-ம் ஆகிய தேதிகளில் புயல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுபகுதி உருவான நிலையில் கன்னியாகுமரியின் சில பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.