மிகவும் பிரபலமான வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் ஏ.எம்.அருண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மருத்துவமனையான வாசன் ஐ கேர். திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட இக்குழுமத்தின் கிளைகள் 170 இடங்களில் கண் மருத்துவமனைகளையும், 27 பல் மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது. இதன் உரிமையாளர் ஏ.எம்.அருண் (52). இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வாசன் ஐ கேர் மருத்துவமனையின் உரிமையாளர் அருண் என்பவருக்கு இன்று காலை 8 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.