சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் 68 வயதான முதியவரின் உடலை எரிப்பதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். முறைப்படி உடலை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சென்னை மாநகராட்சியில் உள்ள மயானத்தில் உடல்களை உள்ளே வைத்து அரைகுறையாக ஏரியூட்டப்பட்ட சம்பவம் அம்பலமானதை அடுத்து 3 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 

சென்னையில் மாநகராட்சி சார்பாக ஏராளமான மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் 68 வயதான முதியவரின் உடலை எரிப்பதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். முறைப்படி உடலை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தகன மேடைக்குள் வைக்கப்பட்ட 40 நிமிடங்களில் தகனம் நிறைவடைந்து விட்டதாக சொல்லி உறவினர்களிடம் அஸ்தியை ஒப்படைத்துள்ளனர். 

ஆனால் இவ்வளவு விரைவாக எப்படி எரியும் என்று சந்தேகப்பட்ட உறவினர்கள் சிலர் தகன மேடையை சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அரைகுறையாக எரிந்த உடல் உள்ளே இருக்கும் போதே மற்றொருவர் உடலை எரியூட்ட உள்ளே அனுப்பியதை பார்த்துள்ளனர். இதுதொடர்பாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 ஊழியர்கள் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.