தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Govt rules regarding appointment of priests in Tamilnadu temples... Chennai high court verdict

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- கேட்ட பணத்தை தரலான திருட்டு வழக்கில் சேர்த்து மானத்தை வாங்கிடுவேன்.. மிரட்டிய காவலர்களுக்கு சரியான ஆப்பு.!

Govt rules regarding appointment of priests in Tamilnadu temples... Chennai high court verdict

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர்கள் நியமனம், இந்த வழக்குளின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என 2021 அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோவில்களுக்கு பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்ட விரோதமானது என்றும் அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது. குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழகஅரசு அறிவித்துள்ளது என குற்றம்சாட்டினார். இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவினை பின்பற்றி, கோவில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க;-  கஞ்சா போதை குற்றவாளியால் ஒரு மாதகாலமாக துடிதுடிக்க இறந்த 7 வயது சிறுமி.. வேதனையில் கலங்கும் அன்புமணி.!

Govt rules regarding appointment of priests in Tamilnadu temples... Chennai high court verdict

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டடிருந்த நிலையில், இந்த வழக்குகளின் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும். ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios