சர்வேதச யோகா தினத்தையொட்டி, இன்று காலை சென்னை கவர்னர் மாளிகையில் யோகா வகுப்பு நடத்தப்பட்டது. அதில், கவர்னர் பன்வாரிலால் கலந்து கொண்டு, பயிற்சி செய்தார். அவருடன் ஏராளமானோரும் பங்கேற்றனர்.

தற்போது, சுற்றுச்சூழல் மற்றும் பல்வேறு ரசாயனம் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க மனிதனின் உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தவும், நரம்புகளுக்க புத்துணர்ச்சிகளையும் கொடுக்க வேண்டும். இதைவிடுத்து பலரும் இன்று மருத்துவமனையை நாடி சென்று, மருந்துகளை சாப்பிட்டு, உடலை மேலும் பலவீனம் செய்து கொள்கின்றனர்.

இதனால், மனிதனின் உடல் உறுப்புகள் சிறிது சிறிதாக பாதிக்கப்படுகிறது. அதனை, நல்ல முறையில் செயல்பட செய்வதற்கு, உடற்பயிற்சி முக்கியமானதாகும். இதையொட்டி, யோகா பயிற்சி செய்வதால், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டமும், எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். இதைதொடர்ந்து நாடு முழுவதும் , அனைத்து மக்களும் யோகா பயிற்சி செய்ய அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில், இன்று நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை ராஜ்பவனில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் இன்று காலை யோகா பயிற்சியை மேற்கொண்டார். அவருடன், கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய மைதானங்களில் மெகா யோகா பயிற்சி நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.