கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் தீபாவளிக்கு முன்பாக டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக்  கடைகள் உள்ளது. இந்த கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மார்ச்  24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், பார்களை திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆகஸ்ட்  மாதத்தில் பார்கள் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால்,  கொரோனா தொற்று சற்று அதிகரித்து வந்ததால் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி தரவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தீபாவளிக்கு முன்பாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,  சமூக இடைவெளி, குறைந்த நபர்களை அனுமதிப்பது, இறைச்சி உணவுகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.