போலீஸ் மீதே எச்சில் துப்புவியா? கண்டக்டரை நடுரோட்டில் வைத்து முகத்தை கிழித்த அதிர்ச்சி சம்பவம்.!
சென்னை சைதாப்பேட்டையில், மாநகர அரசு பேருந்து நடத்துனர் பாலச்சந்திரன் கடையில் நின்று ஜூஸ் குடிக்கும்போது, அங்கே சாலையில் கீழே எச்சில் துப்பியிருக்கிறார். அப்போது, அந்த வழியாகச் சென்ற காவலர் லூயிஸ் மேல் எச்சில் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் காவலர் லூயிஸ் இதுபோல் பொது இடங்களில் எச்சில் துப்பலாமா என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் எச்சில் துப்பிய போது அவ்வழியாக சென்ற காவலர் லூயிஸ் மீது பட்டதாக கூறி அரசுப் பேருந்து நடத்துனரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை சைதாப்பேட்டையில், மாநகர அரசு பேருந்து நடத்துனர் பாலச்சந்திரன் கடையில் நின்று ஜூஸ் குடிக்கும்போது, அங்கே சாலையில் கீழே எச்சில் துப்பியிருக்கிறார். அப்போது, அந்த வழியாகச் சென்ற காவலர் லூயிஸ் மேல் எச்சில் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் காவலர் லூயிஸ் இதுபோல் பொது இடங்களில் எச்சில் துப்பலாமா என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவலர், பாலசந்திரனை முகத்தில் கைகளால் சரமாரியாக குத்தினார். இதில் பாலசந்திரனுக்கு முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவரின் உதடுகள் கிழிந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும், அவரை விடாமல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் தாக்குதல் நடத்திய காவலரிடம், போலீசாக இருந்தாலும் பொது இடத்தில் வைத்து இப்படி அடிக்கலாமா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சைதாப்பேட்டை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். தாக்குதலில் காயமடைந்த பாலச்சந்திரனை மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து ஊழியர் பாலச்சந்திரன் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து ஊழியரைத் தாக்கிய காவலர் லூயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.