Asianet News TamilAsianet News Tamil

தங்க மங்கை கோமதிக்கு அதிமுக சார்பில் உதவித்தொகை அறிவிப்பு..!

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

gomathi marimuthu...AIADMK RS.15 lakh Prize announced
Author
Tamil Nadu, First Published Apr 30, 2019, 11:14 AM IST

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆசிய ஓட்டப்பந்தயப் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

23-வது ஆசிய தடகள போட்டிகள் தோகாவில் நடைபெற்றது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கணை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார். இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள வீராங்கணை கோமதி மாரிமுத்து, மற்றும் ஆரோக்கிய ராஜீவ்க்கு முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுதவிர சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. gomathi marimuthu...AIADMK RS.15 lakh Prize announced

இதனிடையே கோமதி மாரிமுத்துவிற்கு நடிகா் ரோபோ ஷங்கா் ரூ.1 லட்சமும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கினா். அந்த வரிசையில் நடிகா் விஜய் சேதுபதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கோமதியிடம் வழங்கியுள்ளார். தங்கம் வென்ற வீராங்கணை கோமதிக்கு தோ்தல் முடிந்த பின்னா் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. gomathi marimuthu...AIADMK RS.15 lakh Prize announced

இந்நிலையில் அதிமுக சார்பில் அவருக்கு ரூ.15 லட்சம் உதவித் தொகையை அறிவித்துள்ளது. அதோடு வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ.10 லட்சம் உதவித் தொகையையும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios