திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையில், பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய கழிவறைக்கான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. அப்போது, அங்குள்ள பழைய கழிப்பறையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதை கேட்டதும், அங்ருந்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அங்கிருந்த பெண் குழந்தையை மீட்டனர்.

பின்னர், அந்த குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், அந்த குழந்தையை வீசி சென்றது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.