டெல்லியில் அனைத்து முன்னாள் பிரதமர்களை நினைவு கூறும் வகையில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்து மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘அனைத்து முன்னாள் பிரதமர்களின் நினைவாக டெல்லியில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைப்பதற்கு நான் முடிவு செய்துள்ளேன். முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை தொடர்பான அரிய தகவல்கள் உள்ளிட்டவற்றை அவர்களது குடும்பத்தினர் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.