தமிழகத்தில் பாஜக ஜெயிக்கவில்லை என்பதை விட, திமுக வெற்றி பெற்றதில் எந்த பயனும் இல்லை என்பது தான் கவலை - தமிழிசை
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவில்லை் என்பதை விட திமுக, காங்கிரஸ் வெற்றி பெற்றும் எந்த பயனும் இல்லை என்பது தான் வருத்தமாக இருப்பதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலின் சுயநலத்திற்காக தமிழக மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கக் கூடியவர். பாஜகவினர் தமிழக மக்களுக்காக போராடி எல்லா பணிகளையும் செய்வோம். அரசியல் வாழ்க்கையில் எந்த பதவியையும் எதிர்பார்த்து சென்றதில்லை. கட்சி எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பேன்.
தண்ணீர் பாம்பை கொன்று யூடியூபில் பீலா விட்ட வாலிபர்; வீட்டுக்கே சென்று தூக்கிய வனத்துறை
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் எனது கருத்தை வலுவாக கூறுவேன். டெல்லியில் அத்தனை பெரிய கூட்டத்தில் தமிழகத்தை பற்றி பேசி தமிழ்நாட்டை மோடி அங்கீகரித்துள்ளார். பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் பாமக ஓட்டுகள் என காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸுக்கு கிடைத்த ஓட்டுகள் திமுகவின் ஓட்டுகள். காங்கிரஸ் கட்சி தனியாக நின்றிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும். திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும்.
சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் வரிசையில் அதிமுகவில் புதிய அணி; தொடர்ந்து பலவீனமடையும் ஓபிஎஸ் டீம்
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லையே என்பதை விட காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடம் கிடைத்தும் பலனும் இல்லை என்பதுதான் கவலை. டெல்லிக்கு மிகவும் மகிழ்ச்சியோடு செய்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாரத பிரதமர் மோடி நாட்டை ஆளப்போகிறார் என்பதை கேட்கும் போது ஆழ்ந்த மகிழ்ச்சி அடையச் செய்கிறது.