சென்னையில் எறும்புக்கு தீ வைத்த போது இளம்பெண் உடலில் தீப்பற்றியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களது மகள் சங்கீதா (27).  இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சங்கீதா, தனது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அறையில் நிறைய எறும்புகள் இருந்ததால், அவற்றை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பற்றி, உடல் முழுவதும் மளமளவென பரவியது. இதனால், அலறி துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை காப்பாற்ற முயன்றனர்.

இதில், தந்தை சத்தியமூர்த்தி, தாய் தேவி, அண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இவர்கள் 4 பேரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சங்கீதா இறந்தார். மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.