சென்னையில் பெருகும் டைபாய்டு: குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதால் பிசியான மருத்துவமனைகள்!

சென்னையில் டைபாய்டு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Fever among kids, typhoid keep doctors busy in Chennai

சென்னையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவது அதிகமாக உள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் காரணமாக இதுபோன்ற நோய்கள் வருவது வழக்கம். ஆனால், பிப்ரவரி மாதம் பிறந்தும் மருத்துவனைகளில் கூட்டம் குறையாமல் இருக்கிறது.

சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவனைகளில் சிகிச்சை பெற வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

"பொதுவாகவே ஜனவரி மாதத்தில் உள் மற்றும் வெளி நோயாளிகள் அதிகமாக வருவார்கள். பொங்கலுக்குப் பிறகு ஏப்ரல் – மே மாதங்கள் வரை வார்டுகள் அதிக பரபரப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த முறை நாங்கள் டிசம்பரில் இருந்ததைப் போலவே பிஸியாக இருக்கிறோம்” என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் பாலா ராமச்சந்திரன் கூறுகிறார்.

பாரா இன்ஃப்ளூயன்ஸா, அடினோ வைரஸ்கள், சுவாச ஒத்திசைவைப் பாதிக்கும் வைரஸ் போன்றவை இப்போது வரும் நோய்களுக்குக் காரணம் என்று ஆய்வக சோதனைகள் கூறுகின்றன.

காய்ச்சல், சளி, தொண்டை வலி, தொடர் இருமல் போன்றவற்றால் குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். பெரும்பாலான நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகள்  பலன் அளித்தாலும், சிலருக்கு நெபுலைசேஷன் மற்றும் ஸ்டெராய்டுகள் தேவைப்படுகின்றன.

“சில குழந்தைகளுக்கு இருமல் இரண்டு வாரம் வரை நீடிக்கும். குறைவான வயதுள்ள குழந்தைகள் குணமடைய அதிக நாட்கள் ஆகும். சமீபத்தில் கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட குழந்தைகள் அதிக அளவில் வருகிறார்கள்” என்று சூரியா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபா ஹரிஹரன் தெரிவிக்கிறார்.

Chennai Beaches: சென்னையில் மிகவும் தூய்மையான கடற்கரை எது? மாநகராட்சி தரவரிசை வெளியீடு

typhoid

டிஸ்சார்ஜ் ஆன பிறகும், பல பெற்றோர் நோய் எதிர்ப்பு மருத்துகளைக் கேட்டு திரும்ப வருகிறார்கள் என்றும் டாக்டர் தீபாத கூறுகிறார். பெரும்பாலான குழந்தைகள் இரண்டு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் டைபாய்டு தொற்று அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக மே, ஜூன் மாதங்களில் நகரில் டைபாய்டு பாதிப்பு அதிகரிக்கும். செப்டம்பர் மாதத்திற்குள் குறையும்.

“கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நாங்கள் டைபாய்டு நோயாளிகளைப் பார்க்கவில்லை. அக்டோபர் தொடக்கத்தில் சிலர் வந்தார்கள். இப்போது பள்ளிச் சிறுவர்கள் டைபாய்டு பாதிப்பினால் சிகிச்சை பெற வருவதை தினமும் காண்கிறோம்” என்று மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.

சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியயாவால் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இது உணவை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றவும் வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மலத்தின் மூலம் இந்த பாக்டீரியாவை வெளியேற்றலாம். சிலருக்கு மருந்துகள் கொடுத்து குணப்படுத்த முடியும். சிலருக்கு மருத்துவமனையில் அனுமதித்து கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலை ஏற்படும்.

“2020, 2021ஆம் ஆண்டுகளில் இதே மாதத்தில் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று டாக்டர் பாலசுப்ரமணியன் சொல்கிறார்.

Natasha Perianayagam: இந்த 13 வயது சிறுமிதான் உலகிலேயே புத்திசாலி மாணவி! எல்லா டெஸ்டிலும் நம்பர் 1!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios