சென்னையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் என்ஜினீயரிங் பட்டதாரி பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஆர்த்தி (வயது 21). என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருந்தார். இதனிடையே அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, ஆர்த்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து கதறினர். வெளியே சென்று வீட்டு வீடு திரும்பிய பெற்றோர் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.