சரவணபவன் ஹோட்டல் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் இன்று  சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தார். அண்ணாச்சியின் உயிர் பிரிந்த தகவல் அறிந்த ஓட்டல் ஊழியர்கள் கதறி அழுகின்றனர் காரணம், ஜீவஜோதி என்ற பெண்ணால் மட்டுமே இந்த உலகத்திற்கு கெட்டவராக அறியப்பட்டவரின் இன்னொரு முகம் சரவணபவன் ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும் என கண்ணீரோடு கூறுகின்றனர்.

ஹோட்டல் தொழில் சாம்ராஜ்யத்தில் அந்தஸ்துடன் வாழ்ந்து இன்று கடைசி நேரத்தில் கெட்டப்பெயரோடு மரணித்த இந்த அண்ணாச்சி யார்? பரபரப்பாக அவரைப்பற்றி பேசும் அளவிற்கு என்ன காரணம்?  அடிமட்டத்தில் இருந்து உழைப்பால் மேலே வந்தவர் தான் இவர். ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உடைய இவருக்கு 2 மனைவிகள், குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து வந்தது, குடும்ப பிரச்சனைக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் குடும்ப ஜோசியனை சந்தித்தார் அண்ணாச்சி.

இந்தியாவில் செயின் போல கடையை நடத்தி சாத்தியப்படுத்தினார். ஒரே ஆள் எத்தனை கடை வேண்டுமானாலும் வைக்கலாம் என்பதை நிரூபித்தார். அண்ணாச்சியின் வெற்றியை பார்த்துதான் வசந்த் அண்ட் கோ, அடையார் ஆனந்தபவன், சங்கீதா போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் உலகம் முழுவதும் தங்களது கிளைகளை தொடங்கியது.  இந்தியாவிலேயே தனது ஊழியர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்றார். அதனாலே சரவணபவனில் வேலை செய்வது பிடித்திருந்தது. இவ்வளவு பேசிய ஆளு, உதவும் குணம் படைத்த எங்க அண்ணாச்சி  இந்த சின்ன விஷயத்தில் சறுக்கிட்டாரே என ஊழியர்கள் கதறி அழுகின்றனர்.

இப்படி செல்வா செழிப்போடு வாழ்ந்த அண்ணாச்சியை இளம்பெண்ணை 3-வதாக கல்யாணம் செய்தால், ஹோட்டல் தொழிலில் உங்க வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது, குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களும் தீரும் என குடும்ப ஜோசியக்காரன் சொல்ல, 50-க்கு வயதை தாண்டிய அண்ணாச்சிக்கு கல்யாண ஆசை கொழுந்துவிட்டது. இளம் பெண் எப்படி கிடைக்கும்? ஆனாலும் அதிபதியாகவேண்டும் என்ற எண்ணத்தில் தேடி அலைந்தார். 

அந்த சமயத்தில் தன் ஓட்டலில் அசிஸ்டென்ட் மேனேஜராக இருந்தவரின் மகள் ஜீவஜோதியை பார்த்த அண்ணாச்சி பார்த்ததுமே அழகில் மயங்கி விழுந்துள்ளார். ஜோசியக்காரன் சொன்னதால் மட்டுமே பெண்ணை தேடிக்கொண்டிருந்த அவருக்கு  கவர்ச்சியான கண்களும், அழகான முகமும், பார்த்ததும் மயக்கும் தோற்றம் என அண்ணாச்சியை கவர்ந்துள்ளார்.

அப்போதுதான் ஜீவஜோதியின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுக்க, ஜாதகமும் பத்து பொருத்தமும் பக்காவாக இருக்க, தனது மேனேஜரிடமே நேரடியாக விஷயத்தை சொல்லி பெண் கேட்டார். மகளை கட்டிக் கொடுக்க விரும்பவில்லை. ஆனாலும் சில அழுத்தங்களுக்கு பின் சம்மதம் சொன்னாலும்  மகள் ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமாரை லவ் பண்ணி கொண்டிருந்தார். இந்த விஷயம் தெரிந்தும், மகளை அண்ணாச்சிக்கு காட்டிக்கொடுக்க முயற்சித்தார்.  

அதையும் மீறி அவரது காதலன், பிரின்ஸ் சாந்தகுமாருடன் கல்யாணமும் ஆனது. கல்யாணம் ஆனாலும் விடாத அண்ணாச்சிக்கு ஜீவஜோதியை விட மனம் ஏனோ மறுத்ததால் ஜீவஜோதியின் கணவரிடமும் மனைவியை தன்னிடம் தந்துவிடுமாறு கெஞ்சிக்கேட்டுள்ளார். கொடுக்க மறுத்த சாந்தகுமாரி கடத்தி கொலையும் செய்தார். ஊருக்கே வாயார சோறு போட்ட அண்ணாச்சி, தனது ஊழியர்களுக்கு உதவிகளை செய்த அண்ணாச்சி ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்ததால் அவர் வெளியுலகுக்கு கெட்டவரானார்.

செல்வாக்கிலும், மரியாதையிலும் தொட முடியாத உச்சத்தில் இருந்த அண்ணாச்சியின் வளர்ச்சி, ஜோஸ்யக்காரன் பேச்சை நம்பி இப்படி மண்ணாய்  போய்விட்டார் எங்க அண்ணாச்சி என கதறுகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து,  சிறு வயதிலிருந்தே கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து தனது உழைப்பால் உயர்ந்து, பல தொழிலதிபர்களுக்கு முன்னோடியாக விளங்கியும், தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த இவர், கடைசியில் ஜோஸ்யக்காரனின் பேச்சை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அற்ப விஷயத்துக்காக கொலையும் செய்து கடைசிவரை, அல்லோலப்பட்டு மறைந்துள்ளதாக அண்ணாச்சியின் அருமை பெருமைகளை சொல்லி கண்கலங்குகின்றனர் ஓட்டல் ஊழியர்கள்.