எங்கள் கூட்டணியின் பிரசார பீரங்கியே ஈவிகேஎஸ் தான் - அண்ணாமலை கிண்டல்
எங்கள் கூட்டணியின் பிரசார பீரங்கியே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான். அவர் வாயை திறந்தால் போதும் எங்களுக்கு தாமாக ஓட்டு வந்துவிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிண்டலாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். ஈரோடு கிழக்குத் தொகுதியை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திற்கு தேர்தல் வருகிறது. அங்கு எனக்கு கட்சி சார்பில் தேர்தல் குழு பணி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கர்நாடகாவை காட்டிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் அதிக நேரம் இருபேன் என்று எடப்பாடி பழனிசாமியிடமும், செங்கோட்டையனிடமும் தெரிவித்துள்ளேன். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எங்கள் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது வெற்றி பெறுவது உறுதி.
திமுக சார்பில் அனைத்து உறுப்பினர்களும் ஈரோடு தொகுதியில் தான் முகாமிட்டுள்ளனர். பற்றாகுறைக்கு முதல்வர் வேறு இரண்டு நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் மூலம் ஆளும் கட்சி தோல்வி பயத்தில் இருப்பது தெளிவாக தெரிகிறது. ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவை வாயைத் திறந்தால் போதும் தாமாக எங்களுக்கு ஓட்டு வந்துவிடும்.
அரசு ரகசியங்களை பாதுகாக்க தவறிய ஆர்.என்.ரவி; ஆளுநர் பதவியில் நீடிப்பது சரியா? வீரமணி கேள்வி
அவர் தான் எங்கள் கூட்டணியின் பிரசார பீரங்கியாக இருப்பார். ஏற்கனவே இளையராஜாவை திட்டிவிட்டார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார் என்றார்.