மக்களே உஷார்.. பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசிய இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி..!
சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அந்த பகுதியில் உள்ள மெப்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநில பெண்கள் தங்கி உள்ளனர்.
பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போன் பேசிய இளம்பண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்ஜ் போட்டு கொண்டே செல்போன் பேசிம் போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அந்த பகுதியில் உள்ள மெப்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநில பெண்கள் தங்கி உள்ளனர்.
இங்குள்ள ஒரு அறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற பெண்ணும் தங்கி வந்தார். குமாரி தனது செல்போனில் பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக் கொண்டு போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, குமாரி துவைத்து காயப்போட்டிருந்த துணி உயர்மின் அழுத்த கம்பி செல்லும் பகுதியில் விழுந்துவிட்டது. இதை பிளாஸ்டிக் சேரில் செல்போன் பேசிய படி எடுக்க முயன்ற போது உயர் அழுத்த மின்சார கம்பியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் கதிர்வீச்சு காரணமாக செல்போனில் பாய்ந்தது. இதனால், குமாரி மீது மின்சாரம் பாய்ந்து செல்போனும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அந்த இளம்பெண் அலறிய படி தூக்கி வீசப்பட்டார்.
மேலும், குமாரி மீது பாய்ந்த மின்சாரம் அந்த கட்டிடம் முழுவதும் பாய்ந்தது. அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூனம்(20) ஊர்மிளா குமாரி (24) ஆகிய இருவருக்கும் மின்சாரம் தாக்கியது. இதில், படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கும்கும் குமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.