இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக தினமும் 700ஐ கடந்திருக்கிறது. நேற்று 716 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6,520 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

2,134 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கும் நிலையில் தமிழகத்தில் இதுவரை 61 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. அதிர்ச்சி தரும் செய்தியாக நேற்று மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் கொரோனா பலி 39ஐ எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு தொற்று உறுதியாகி இதுவரை 4,882 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் பலியும் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

சென்னை - 39
செங்கல்பட்டு - 4
திருவள்ளூர் - 3
மதுரை - 2
விழுப்புரம் - 2
கோவை - 1
கடலூர் - 1
திண்டுக்கல் - 1
ஈரோடு - 1
காஞ்சிபுரம் - 1
கன்னியாகுமரி - 1
ராமநாதபுரம் - 1
தேனி - 1
தூத்துக்குடி - 1
திருநெல்வேலி - 1
வேலூர்-1