Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பீதி... சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு சீல் வைப்பு..!

தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் அனைத்து புறநகர் ரயில்கள், பறக்கும் ரயில்கள் உட்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று இரவு புறப்பட்ட ரயில்கள் அனைத்தும் அந்த ரயில்கள் சேர  வேண்டிய இடங்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டது. 

egmore,central railway station seal
Author
Chennai, First Published Mar 23, 2020, 5:39 PM IST

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து அனைத்து சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

egmore,central railway station seal

இந்நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் ரயில்களில் பயணம் செய்தவர்களில் சிலருக்கு ஒரு வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ரயில் பயணங்கள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் உடனடியாக மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் அனைத்து புறநகர் ரயில்கள், பறக்கும் ரயில்கள் உட்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று இரவு புறப்பட்ட ரயில்கள் அனைத்தும் அந்த ரயில்கள் சேர  வேண்டிய இடங்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டது. 

egmore,central railway station seal

இன்று காலை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நேற்று இரவு புறப்பட்டு ரயில்கள் அனைத்தும் அதிகாலையில் வந்தடைந்தது. அதில் பயணிகள் அனைவரும் பல கட்ட சோதனைக்கு பின்பு வெளியில் அனுப்பப்பட்டனர். அதை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களும் பேரிகார்டுகள் வைத்து அடைத்து வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் யாரும் இந்த ரயில் நிலையங்களுக்கு செல்ல முடியாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios